இந்தியா

இமாச்சல பிரதேச ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம்: ஆச்சாரியா தேவ் விராட் குஜராத்துக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

‘‘குஜராத் மாநிலத்தின் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி அப்பதவியில் இருந்து இன்று விடுவிக்கப்படுகிறார். அவரது இடத்தில் இமாச்சலப்பிரதேசம் மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ் விராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர்  கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT