இந்தியா

பாகுபலி திருட்டு சிடி-க்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

பாகுபலி திருட்டு சிடி-க்கள் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக அளவு பிடிபடுகின்றன.

பாகுபலி திரைப்படம் தற்போது நாடு முழுவதும் சுமார் 4,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட 3 நாட்களிலேயே சுமார் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திரைப்படத்தின் திருட்டு சிடிக்கள் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் பிடிபட்டு வருகின்றன.

நேற்று ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் பஸ்ஸில் சோதனையிட்ட போது, 50க்கும் மேற்பட்ட திருட்டு சிடிக்கள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய காவல்துறையினர், ஒருவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT