‘‘டாக்டர்கள் - நோயாளிகள் இடையே உணர்வுப்பூர்வமான பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவு மேம்படும்’’ என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் மேல் உதட்டு பிளவு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தை முதல்வர் ஆதித்யநாத் தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்து பேசியதாவது:
டாக்டர்களுக்கும் நோயாளி களுக்கும் இடையில் உணர்வுப் பூர்வமான பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். அதை நாம் இந்த வர்த்தக உலகத்தில் இழந்து விட்டோம். வர்த்தகத்துக்கு முன் னுரிமை அளித்ததால், டாக்டர்கள் மீதான மதிப்பு குறைந்துவிட்டது. எனவே, டாக்டர்கள் - நோயாளிகள் இடையே உணர்வுப்பூர்வமான பேச்சுவார்த்தை இருக்க வேண்டும்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களுக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தி தருகின்றன. அத் துடன் டாக்டர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதற் கும் உதவுகின்றன. இவ்வாறு ஆதித்யநாத் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கல்வி, சுகா தாரம் உட்பட பல்வேறு துறை களில் சேவைகளை செய்து வரும் ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ தன் னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசுகள் வழங் கினார். - பிடிஐ