கோப்புப் படம் 
இந்தியா

மருத்துவ முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்ய முடிவு

செய்திப்பிரிவு

மருத்துவத்தில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாய மாக உள்ளது. முதுகலை படிப்பான எம்டி., எம்எஸ்., படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என்று இருந்தது.

இப்போது, எம்டி., எம்எஸ்., படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என்று கருதி அதை நீக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய் துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், எய்ம்ஸில் முது கலைப் படிப்புகளுக்கு சிறப்பு தேர்வு தொடரும்.

SCROLL FOR NEXT