கோப்புப் படம் 
இந்தியா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால்   10 வருடங்களாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் கடந்த 10 வருடங் களாக ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப் படாமல் உள்ளது. இதன் பின்னணி யில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு இல்லாதது காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2004-ல் தமிழ் மொழி, மத் திய அரசின் செம்மொழி பட்டி யலில் வெளியிடப்பட்ட பின் உரு வாக்கப்பட்டது மத்திய அரசு செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.

இதன் துவக்கம் முதல் 14 வரு டங்களாக நிரந்தரப்பணியில் இயக் குநர் உள்ளிட்ட 150 அலுவலர்கள் அமர்த்தப்படாமல் அது அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதன் மீதான செய்திகள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளி யாகி வருகிறது.

கடைசியாக, கடந்த ஜூலை 2 அன்றும் ஒரு செய்தி வெளியான நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கிடைத்துள்ளது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதி செம் மொழி தமிழாய்வு அறக்கட்டளை யின் சார்பில், ஒரு விருது உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், ரூ.10 லட்சத்துக்கான காசோலை, ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை, கலைஞர் மு.கருணாநிதியின் உருவம் பதித்த 80 பவுன் எடையுள்ள தங்கக்காசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த தமிழ் அறிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்க ஒரு விழா நடத்தி அதில் இந்த விருது அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கலைஞர் தனது சொந்த பணத்தில் ரூ.1 கோடி நிதியில் அறக்கட்டளை அமைத்து அதன் வட்டித் தொகையில் இந்த விருது அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 30, 2008-ல் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அறிவித்திருந்தார்.

இதன் முதல் விருது 2009-ல் பின்லாந்து அறிஞரான அஸ்கோ பர் போலோவிற்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலால் 2010-ல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு பின் எவருக்கும் அந்த விருது வழங்கப்படவில்லை. ஜூலை 2017-ல் ஒருமுறை 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கு விருது அறிவிப்பு வெளியானது. அதற்கு பெறப்பட்ட பரிந்துரை மனுக் களிலும் முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அந்நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலரும், மைசூரில் உள்ள இந்திய மொழி கள் நடுவண் நிறுவனத்தின் முன் னாள் துணை இயக்குநருமான பேராசிரியர் க.ராமசாமி கூறும் போது, ‘விருதுக்கானப் பரிந்துரைக ளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவை தமிழாய்வு மத்திய நிறு வனத்தின் கல்விக்குழு அமைக்க வேண்டும். இதுவரையும் கல்விக் குழு அமைக்கப்படாதது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசு மற்றும் தமிழக முதல் அமைச்சருக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது காரணம்.

நாட்டின் மற்ற மத்திய தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு இருப்பது போல் இதற்கும் தலைவராக ஒரு கல்வியாளரையே அமர்த்த நிர்வாக கட்டமைப்பில் சட்டதிருத் தம் செய்தால் தான் செம்மொழி தமி ழாய்வு மத்திய நிறுவனம் வளர்ச்சி பெறும்’ எனத் தெரிவித்தார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் குடியரசு தலைவரால் அளிக்கப்படுபவை 'செம்மொழி விருதுகள்’ என அழைக்கப்படுகின்றன. இதில், தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது மற்றும் இளம் அறிஞர் விருது ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

வருடந்தோறும் அளிக்கப்பட வேண்டியவை ஓரிரு முறை சில ஆண்டுகளுக்கு ஒன்றாக சேர்த்தும் தமிழாய்வு நிறுவனத்தால் முடிவு செய்து வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் இருந்து கலைஞர் விருது மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு பத்து வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது.

விருது பெற தகுதிகள்

கலைஞர் விருது பெறுவதற்கு பண்டைய தமிழ் இலக்கணம், மொழியியல், தமிழ் இலக்கியத் திறனாய்வு, தொல்லியல், கல் வெட்டியல், படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் மற்றும் இசை ஆகிய துறைகளில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

தனித்தன்மை கொண்ட உலகளாவிய ஏற்பு பெற்ற ஒரு நூல் அல்லது வாழ்நாள் பங்களிப்புக்காக இந்த விருது பெறுபவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

இதை பரிந்துரைப்பவர்கள் பட்டியலில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள், தேசிய மற்றும் சர்வதேச விருதினை பெற்றவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT