கடந்த 1994-ம் ஆண்டு நாகாலாந்தில் நீர்த்தேக்கங்களைப் புதுப்பிப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறை கேடாகப் பயன்படுத்தியாக, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முன்னாள் இணை யமைச்சர் பி.கே. துங்கனுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் 4.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து.
வழக்கில் தொடர்புடைய மேலும் 2 குற்றவாளிகளுக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆர்.கே. துங்கன், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச் சரவையில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்வளத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். மேலும் அருணா சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல் வராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 1994-ம் ஆண்டு அப்போதைய திட்டக் குழு, நாகாலாந்தில் நீர்தேக் கங்களைப் புதுப்பிக்க ரூ. 2 கோடி ஒதுக்கியது. இரு தவணைகளில் தலா ரூ.1 கோடி அளிக்கப்பட்டது.
இப்பணத்தைக் கையாடல் செய்த தாக துங்கன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. 1998-ம் ஆண்டு துங்கன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 17 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், தாலி ஆவோ, சி. சங்கித், மகேஷ் மகேஷ்வரி ஆகியோருடன் சேர்ந்து ஆள்மாறாட்டம், போலி வங்கிக் கணக்கு, போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, துங்கன் இப்பணத்தைக் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து துங்கன் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து 68 வயதாகும் துங்கன் மற்றும் பிற குற்றவாளிகள் மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான தண்டனையை சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் ஜெயின் நேற்று அறிவித்தார். துங்கனுக்கு நாலரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக் கப்பட்டது. தாலி ஆவோ மற்றும் சி சங்கித் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகளும் தாலி ஆவோவுக்கு ரூ.6,000 அபராதமும் விதிக்கப் பட்டது. மகேஷ் மகேஷ்வரிக்கு இரண் டரை ஆண்டுகள் சிறைத்தண் டனையும், சங்கித் மற்றும் மகேஷுக்கு தலா ரூ.4,000 அபராதமும் விதிக்கப் பட்டது. துங்கன் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித் துள்ளார்.