பெங்களூருவில் நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்த, `பெரிஸ்கோப்' வீடியோ அப்ளிகேஷனை பயன்படுத்த மாநகர போலீஸார் திட்ட மிட்டுள்ளனர்.
சம்பவத்தைப் பார்க்கும் மக்கள் தங்களது கேமரா மூலம் அதை மற்றவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பி, குற்றவாளிகளை கைது செய்ய உதவ முடியும்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:
ட்விட்டர், ஃபேஸ்புக், மின்னஞ் சல் ஆகியவை மூலம் வரும் புகார்கள் உண்மை தன்மையுடன் இருக்கின்றன. இதனால் போலீஸார் விரைவாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உட னடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.
இன்றைய இளைய தலைமுறை யினர் அன்றாடம் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது காவல் துறைக்கு தெரிவிக்கின்றனர்.
அடுத்தக்கட்டமாக குற்றச் செயல்களை ஆதாரத்துடன் தெரி விக்கும் வகையில் `பெரிஸ்கோப்' அப்ளிகேஷனை பயன்படுத்த இருக்கிறோம்.
இதன்படி, ட்விட்டர் நிறுவனத் தின் ஸ்மார்ட் ஃபோன் வீடியோ அப்ளிகேஷன் (பெரிஸ்கோப்) மூலம் சம்பவத்தை நேரலையாக தேவையானவர்களுக்கு அனுப்ப முடியும்.
மும்பையில் உள்ள ட்விட்டர் நிறுவனத்துடன் இது தொடர்பாக பேசி இருக்கிறோம். இதன் மூலம் மக்களின் கண் முன்னால் நடைபெறும் குற்றச் செயல்களை பெரிஸ்கோப் மூலம் வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனால் குற்றவாளி களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்
இனிவரும் நாட்களில் பெங்க ளூரு போலீஸார் நடத்தும் செய்தியாளர் சந்திப்புகளையும் பெரிஸ்கோப் மூலம் நேரலையாக ஒளிபரப்பவும் முடிவு செய் துள்ளோம். இதன் மூலம் மக்கள் தங்களது கருத்துக்களை வீடியோ மூலம் நேரடியாக போலீஸாருக்கு தெரிவிக்க முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோர், செயின் திருடர்கள், பிக்பாக்கெட் திருடர்கள் உள்ளிட்டோரை மக்கள் பெரிஸ்கோப் மூலம் வீடியோ எடுத்து அனுப்பினால், நேரலை யாக போலீஸார் பார்த்து நட வடிக்கை எடுக்க முடியும்.
வீடியோ எந்த இடத்தில் எடுக் கப்பட்டதோ, அங்குள்ள போலீஸா ருக்கு உடனடியாக தகவல் தெரி விக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.