இந்தியா

உள்நாட்டில் தயாரான ஆகாஷ் ஏவுகணை: இந்திய விமானப் படையில் சேர்ப்பு

ஐஏஎன்எஸ்

உள்நாட்டிலேயே தயாரான தரையில் இருந்து வானில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை நேற்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மஹாராஜ்பூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த ஏவுகணையை விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹாவிடம் ஒப்படைத்தார்.

ஒலியை விட மூன்று மடங்கு வேகமான இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் எட்டு இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. இதனைத் தயாரிக்க 92 சதவீதம் உள்நாட்டுப் பொருட்களையே பயன்படுத்தியுள்ளனர். இதனை சாலை, கடல் மற்றும் வான் மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

100 கிமீ தூரத்துக்கு அப்பால் உள்ள இலக்கை இந்த ஏவுகணை அடையாளம் காணும் திறன் கொண்டதாகும். மேலும், எதிரியின் இலக்கை 25 கிமீ தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமை பெற்றதாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆகாஷ் ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT