மே 1 -ம் தேதி முதல் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதிதத் நிலையில் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகத்திலுள்ள அதிகாரி சுரேந்தர் பகத் கூறியதாவது:
மே 30 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை சவூதி வேளாண்மை அமைச் சகம் எடுத்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சவூதி அதிகாரி களிடம் பேசி வருகிறோம் என பி.டி.ஐ.க்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார் பகத்.
இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிளகாயை மாதிரிக்காக சோதனை செய்த போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் படிந்து இருப்பது தெரியவந்தது. எனவே தடை விதிப்பது என முடிவு செய்துள்ள தாக வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். 2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.