இந்தியா

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி: உத்தவ் உறுதி

பிடிஐ

சிவசேனா பத்திரிகையான `சாம்னா’வுக்காக அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவுட்டுக்கு, உத்தவ் தாக்கரே நேற்று பேட்டி அளித்தார். அப்போது தாக்கரே கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தை சிவசேனா கட்சி தனித்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது என் கனவு. அதை நிறைவேற்ற உறுதியாக இருக்கிறேன். சேனாவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது கனவு மட்டுமல்ல என் சபதம். சிவசேனா தொண்டர்கள் ஒவ்வொருவரின் கனவு அது. விரைவில் மகாராஷ்டிரா மக்கள் அனைவரின் கனவாகும்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க அந்த கட்சி கேட்காம லேயே நிபந்தனையற்ற ஆதர வளிப்பதாக சரத்பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அந்த கட்சி வெட்கங்கெட்ட கட்சி.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

SCROLL FOR NEXT