இந்தியா

காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று முன்தினம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இதுகுறித்து எல்லை பாதுகாப் புப் படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் ஜம்முவில் நேற்று கூறியதாவது:

ஜம்மு மாவட்டம் அர்னியா பகுதியில் சர்வதேச எல்லை (ஐபி) அருகே உள்ள 6 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். சிறிய துப்பாக்கிகள் மற்றும் 82 மி.மீ. சிறு பீரங்கிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

எனினும், பிஎஸ்எப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த சண்டை நேற்று அதிகாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகி றோம். எத்தகைய நிலையையும் எதிர்கொள்வதற்காக வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

12 மணி நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் 3 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.

வடக்கு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பிஎஸ்எப் வீரர் பலியானார். இந்தத் தகவலை பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஸ்ரீநகரில் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT