இந்தியா

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் தொடரும் துயரம்: ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை

இரா.வினோத்

கர்நாடகத்தில் கடந்த சில தினங்க ளாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கடன் தொல்லையின் காரணமாக பல்வேறு இடங்களில் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால், கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக விவசாயிகள் கடன் தொல்லை, பயிர்கள் நாசம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து பெலகாவி சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை அருகேயுள்ள தொட்டதாரள்ளியை சேர்ந்தவர் பிரதீப் (37). கரும்பு விவசாயியான இவர் வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை அடைக்க முடியாததால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதே கே.ஆர். பேட்டை வட்டத் தில் உள்ள மடோனஹள்ளி கிராமத் தைச் சேர்ந்தவர் மகா தேவசாமி (32). குறுநில விவசாயியான இவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் நகைகளை திருப்ப காலக்கெடு விதித்து நோட்டீஸ் வந்ததால் விரக்தி அடைந்தார். இதனால் ஹேமாவதி, நதியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் மண்டியா அருகேயுள்ள பெலகூருவை சேர்ந்த நெல் விவசாயி சீனிவாஸ் (37), மற்றும் நாரயணபுராவை சேர்ந்த கரும்பு விவசாயி ராஜூகவுடா (52) ஆகியோரும் கடன் தொல்லையால் தவித்தனர். நேற்று தங்களது நிலத்துக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மண்டியாவில் ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக அரசிய லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் பெலகாவி மழைக் கால சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டன. பாஜக உறுப்பினர்கள், 'தொடரும் விவசாயிகளின் தற் கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.

கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் விவ‌சாயிகளின் த‌ற்கொலையை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT