ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் பெயரை 2007-ம் ஆண்டில் பத்ம விருதுக்கு ராஜஸ் தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி பிரிட் டனுக்கு தப்பியோடிய லலித் மோடிக்கு பல்வேறு வகைகளில் உதவியதாக வசுந்தரா ராஜே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் மேலும் ஒரு திருப்பமாக, 2007-ம் ஆண்டில் லலித் மோடியை பத்ம விருதுக்கு வசுந்தரா பரிந் துரைத்தார் என்ற செய்தியை தைனிக் பாஸ்கர் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவியவர் என்ற வகையில் லலித் மோடியை 2007-ம் ஆண்டில் பத்ம விருதுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார். அப்போது வசுந்தரா ராஜே ராஜஸ் தான் முதல்வராக இருந்தார். லலித் மோடி ராஜஸ்தான் மாநில கிரிக் கெட் சங்க தலைவராக இருந்தார்.
மேலும் வில்வித்தை வீரர் லிம்பா ராமையும் பத்ம விருதுக்கு ராஜஸ் தான் அரசு பரிந்துரைத்தது. மத்திய அரசு லலித் மோடியின் பெயரை நிராகரித்து விட்டது. லிம்பா ராமுக்கு 2012-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்று அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டுமென்ற காங்கிரஸ் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இது தொடர் பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், ‘‘ இவ்வளவு மோசடிகள் நடைபெற்றுள்ளது தெரிந்தும் மத்திய அரசும், பாஜக தேசிய தலைமையும் வசுந்தரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது’’ என்றார்.
ஆனால், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் செய லாளர் சுபாஷ் ஜோஷி கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 6 ஆட்டங்கள் லலித் மோடியின் முயற்சியால் ராஜஸ்தானில் நடை பெற்றன. மாநிலத்தில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமி அமைக்கப்பட்டது. மாநிலத்தில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அவர் சிறப்பான பங்களிப்பை அளித்தார்’’ என்று கூறியுள்ளார்.