இந்தியா

யாகூப் மேமன் மனு நிராகரிப்பை வரவேற்கும் பாஜக

பிடிஐ

1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற யாகூப் மேமன் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதை பாஜக வரவேற்றுள்ளது.

பாஜக தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியபோது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கிறோம். 1993 மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் நீதி கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இந்த தீர்ப்பின் மூலம் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்றுள்ளது” என்றார்.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நளின் கோலி கூறிய போது, “ஒட்டுமொத்த சட்ட நடைமுறைகளுக்கும் ஒரு இறுதித்துவத்தை தீர்ப்பு அளித்துள்ளது. கோர்ட் முடிவுக்கு அப்பால் சென்று அதன் மேல் ஏதாவது ஒன்றை ஏற்றிக் கூறுவது இனி முறையாகாது. யாகூப் மேமன் விசாரணை இத்துடன் முடிவடைகிறது” என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, "டைகர் மேமனையும் மத்திய அரசு பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரும் போதுதான் முழு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, மரண தண்டனையை ஒழிக்க சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், “குற்றங்கள் இழைப்பது சமூகவியல் பிரச்சினையே தவிர சட்டப்பிரச்சினை அல்ல” என்றார்.

SCROLL FOR NEXT