இந்தியா

லலித் மோடியை கைது செய்ய நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

செய்திப்பிரிவு

பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கு ஒன்றில் ஐபில் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாக கைது உத்தரவு பிறப்பிக்க கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

லண்டனில் தங்கியுள்ள லலித்மோடி போர்ச்சுகல் செல்ல பயண ஆவணங்கள் கிடைக்க, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக கூறி புயலை கிளப்பினார் லலித் மோடி. இந்நிலையில் லலித் மோடிக்கு எதிராக டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாக உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அவரை பிரிட்டனில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT