இந்தியப் பங்குச்சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 611.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.99 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நிஃப்டி 151.15 புள்ளிகள் உயர்ந்து 6,800 என்ற நிலையில் இருந்தது.
நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி, மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கி, மூலதன பொருட்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு, அட்டோ, உலோக துறை பங்குகளின் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்ததும் பங்குச்சந்தையில் புதிய உச்சம் ஏற்பட காரணம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
லாபமடைந்த நிறுவனங்கள்:
பங்குச்சந்தை ஏற்றத்தால் எச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் 3.19% உயர்ந்து ரூ.742-க்கும், ஐ.சி.ஐ.சி.ஐ பங்குகள் 3.98% உயர்ந்து ரூ.989.05-க்கும் வர்த்தகமாகின.