இந்தியா

இந்திய குடியுரிமை கோரும் 500 பாகிஸ்தான் இந்துக்கள்

செய்திப்பிரிவு

லக்னோ: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 500 இந்துக்கள், மத்திய அரசிடம் குடியுரிமை கோரி வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டம், குண்டாவில் ஸ்ரீ ராம் கதா மகோத்சவம் நடைபெற்றது. ஜன் சத்தா தளம் தலைவரும் குண்டா தொகுதி எம்எல்ஏவுமான ராஜா பையா இந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ராஜஸ்தானின் ஜோத்பூர் முகாமில் தங்கியுள்ள 500 பாகிஸ்தான் இந்துக்கள் பங்கேற்றனர்.

மகோத்சவம் நிறைவு பெற்று 500 பாகிஸ்தான் இந்துக்களும் நேற்று 10 பேருந்துகளில் ஜோத்பூருக்கு புறப்பட்டனர். அப்போது ஹீராலால் என்பவர் நிருபர்களிடம் கூறும்போது, “கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ராஜஸ்தானின் ஜோத்பூரில் தஞ்சமடைந்தோம். அங்குள்ள சிறப்பு முகாமில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை. குடியுரிமை சட்டத்தின் கீழ் அனைவருக்கும் மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்" என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT