இந்தியா

மணிப்பூரில் 50 வீடுகள் எரிப்பு - இணைய சேவை துண்டிப்பு

செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்​பூர் மாநிலம் உக்​ருல் மாவட்​டத்​தில் உள்ள லிட்டன் கிராமத்​தில் தங்​குல் நாகா மற்​றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை மீண்​டும் கடும் மோதல் ஏற்பட்டது.

இதைத்​தொடர்ந்து அப்​பகு​தி​யில் பதற்​றம் நில​வியதையடுத்து மாவட்ட ஆட்​சி​யர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்​றுக்​ கிழமை முதல் தடை உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார். மேலும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக உக்​ருல் மாவட்​டத்​தில் 5 நாட்​களுக்கு இணைய சேவையை ரத்து செய்து அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

          

இந்த நிலை​யில்​தான் ஆட்​சி​யரின் உத்​தர​வை​யும் மீறி திங்​கள்​கிழமை நள்​ளிரவு மர்ம நபர்​கள் அப்​பகு​தி​யில் உள்ள வீடு​களுக்​குத் தீ வைக்​கத் தொடங்​கினர். செவ்​வாய்க்​ கிழமை காலை நில​வரப்​படி சுமார் 50 வீடு​கள் தீயில் எரிந்து சாம்​பலான​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், இரு தரப்​பினரிடையே துப்பாக்கிச்சூடும் நடை​பெற்​ற​தாகத் தகவல்​கள் தெரிவிக்கின்றன. நிலை​மை​யைக் கட்​டுக்​குள் கொண்​டுவர அப்பகு​தி​யில் பலத்த பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

“லிட்​டன் சம்​பவத்​தைத் தொடர்ந்து கொன்​ஷாகுல் கிராம மக்​கள் வீடு​களை விட்டு வெளி​யேறி​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களில் உண்​மை​யில்​லை. இது​போன்ற வதந்திகளைப் பரப்​புவோர்​ மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​று ​காவல் ​துறை எச்​சரிக்​கை விடுத்துள்​ளது.

SCROLL FOR NEXT