அனந்தபூர்: ஆந்திர மாநிலம் கும்மராவான்லபல்லியில் குவாரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் குவாரிக்கு தேவையான டெட்டனேட்டர், அமோனியம் சல்பேட், டீசல் போன்றவற்றை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் அதே இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.