இந்தியா

கேரளாவின் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வயநாடு: கேரளா​வில் சுரங்​கப்​பாதை திட்​டப் பணி​கள் நடைபெற்று வரும் பகு​தி​யில் கனமழை​யால் ஏற்​பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயி​ரிழந்​தனர்.

கேரளா​வில் தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. குறிப்பாக வயநாடு மாவட்​டத்​தில் கடந்த 24 மணி நேரத்​தில் 265 மி.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. கனமழை​யால் வயநாட்டின் மேப்பாடி சுரங்கப்பாதை திட்டம் அருகே உள்ள கள்ளாடியில் நேற்று பெரியளவில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

இதில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 10 பேர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது. காயமடைந்த 6 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். தீயணைப்​புப் படை​யினருடன் இணைந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்​புப் படை (என்​டிஆர்​எப்) குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நிலச்​சரி​வைத் தொடர்ந்​து, கேரள முதல்​வர் வி.டி. சதீசன் அமைச்​சர்​கள் மற்​றும் உயர் அதி​காரி​களு​டன் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேற்​கொள்​ளு​மாறு உத்​தர​விட்​டார். அமைச்​சர்​கள் ஏ.பி. அனில் குமார் மற்​றும் டி. சித்​திக் ஆகியோரை நேரில் சென்று பார்​வை​யிடு​மாறும் அறி​வுறுத்​தி​னார்.

இதுகுறித்து அமைச்​சர் டி. சித்​திக் கூறும்​போது, “இது இயற்கையான நிலச்​சரிவு அல்ல, அதி​காரி​களின் அலட்​சி​யத்​தால் மனித​னால் உரு​வான நிலச்​சரிவு. இந்த இடத்​தில் நிலச்​சரிவு ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் கொங்​கன் ரயில்வேக்கு எழுத்​துப்​பூர்​வ​மாக எச்​சரித்​தும் அவர்​கள் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

மேலும், கோழிக்​கோடு மற்​றும் வயநாட்​டிலிருந்து கூடு​தலாக 60 என்​டிஆர்​எப் வீரர்​கள் சம்பவ இடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்” என்​றார். கல்​லாடி பகு​தி​யில் நிலச்​சரிவு ஏற்​பட்​டதை அடுத்​து, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்​டி) வயநாடு மற்​றும் கோழிக்​கோடு மாவட்​டங்​களுக்கு சிவப்பு எச்​சரிக்கை விடுத்துள்ளது. மலப்​புரம், கண்​ணூர், காசர்​கோடு ஆகிய மாவட்டங்​களுக்கு ஆரஞ்சு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. பகல் நேரத்​தில் மானந்​தாவடி​யில் 64 மி.மீ. மழை​யும், வைத்திரியில் 123 மி.மீ. மழை​யும் பதி​வாகி​யுள்​ள​தாக ஐஎம்​டி தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT