மம்தா பானர்ஜி | கோப்புப் படம்

 
இந்தியா

மே. வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் ? - வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் 5 மாவட்டங்கள்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தின் அடுத்த முதல்​வர் யார் என்​பதை அம்​மாநிலத்​தில் உள்ள 5 முக்​கிய​மான மாவட்​டங்​கள் தீர்​மானிக்​க​வுள்ளன என்று தெரிய​வந்​துள்​ளது.

மேற்கு வங்க சட்​டப்பேர​வை தேர்தலில் இன்​று (ஏப்​ரல் 29) 2-ம் கட்​ட​மாக 142 தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தின் அடுத்த முதல்​வர் யார் என்​பதை தீர்​மானிப்​பது 5 மாவட்ட தொகு​தி​களின் முடிவு​கள்​தான் என்று தெரிய​வந்​துள்​ளன. கொல்​கத்​தா, ஹவு​ரா, 24 வடக்கு பர்​கா​னாஸ், 24 தெற்கு பர்​கா​னாஸ், நாடியா ஆகிய 5 மாவட்​டங்​கள்​தான் அவை.

இந்த மாவட்​டங்​களில் அதிக தொகு​தி​களை வெல்​பவர்​கள்​தான் ஆட்​சி​யில் அமர்ந்து வரு​வது கடந்த கால வரலாறாக உள்​ளது. கடந்த 2011 பேர​வைத் தேர்​தலில் இந்த மாவட்​டங்​களில் உள்ள 108 தொகு​தி​களில் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 82 இடங்​களை வென்று ஆட்​சி​யைப் பிடித்​தது.

2016 தேர்​தலின்​போது இந்த 5 மாவட்​டங்​களில் 91 இடங்​களை​யும், 2021-ம் ஆண்டு தேர்​தலில் 97 இடங்​களை​யும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி கைப்​பற்றியது.

எனவே, இந்​தத் தேர்​தலிலும் இந்த 5 மாவட்​டங்​களில் பெரு​வாரி​யான தொகு​தி​களை வெல்​லும் கட்​சி​தான் ஆட்​சி​யமைக்​கும் என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

ஆனால், இந்​தத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸுக்​கு, சுவேந்து அதி​காரி தலை​மையி​லான பாஜக கடும் சவால் அளிக்​கிறது. அது​மட்​டுமல்​லாமல் காங்​கிரஸ், இடது​சா​ரிக் கட்​சிகள், ஏயுஜேபி கட்​சிகளும் கடும் சவாலை அளித்து வரு​கின்​றன.

SCROLL FOR NEXT