நவி மும்பை: நவி மும்பையின் கரஞ்சடே பகுதியைச் சேர்ந்த ஒரு நிலம், நாதன் எலியாஹு சின்சோல்கர் மற்றும் ஷாலோம் எலியாஹு சின்சோல்கர் ஆகிய இரு சகோதரர்களுக்குச் சொந்தமானது.
இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு புலம் பெயர்ந்து, அங்கேயே காலமானார்கள். இதை அறிந்த சூரஜ் ஷிண்டே, தனது தந்தை மற்றும் மைத்துனரை, மறைந்து போன நில உரிமையாளர்கள் நாதன் மற்றும் ஷாலோம் போல ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இதற்காக போலி பான் கார்டு மற்றும் போலி ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களைத் தயாரித்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை ரூ.2.29 கோடிக்கு போலி விற்பனைப் பத்திரம் மூலம் விற்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில், நவி மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், கோவாவின் திவிம் பகுதியில் சூரஜ் ஷிண்டே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சித்தப்பா சதீஷ் நம்தேவ் ஷிண்டே (41) மற்றும் மைத்துனரான தேஜஸ் பிரமோத் சுர்வே (26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.