இந்தியா

4-வது எஸ்-400 கவச வாகனம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா​வுக்​கான 4-வது எஸ்​-400 வான் பாதுகாப்பு கவச வாக​னத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.

ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு கவச வாக​னம் வாங்க கடந்த 2018-ல் மத்​திய அரசு ஒப்பந்தம் செய்​தது. இதன்​படி 5 எஸ்​-400 பாது​காப்பு கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டும். இது​வரை 3 எஸ்​-400 பாது​காப்பு கவசங்​கள் இந்தி​யா​விடம் ஒப்படைக்கப்பட்டு உள்​ளன. இவை பாகிஸ்தான், சீன எல்லைப் பகு​தி​களில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

இந்​நிலை​யில் 'ஆபரேஷன் சிந்​தூர்' ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்​னிட்​டு, ரஷ்​யா​வின் நான்​காவது எஸ்​-400 வான் பாது​காப்பு கவச வாக​னம் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இது மே மாத மத்​தி​யில் இந்​தி​யத் துறை​முகத்தை வந்​தடை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதி​ராக `ஆபரேஷன் சிந்​தூர்' ராணுவ நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அப்​போது எஸ்​-400 கவச வாகனம் மிகச் சிறப்​பாக செயல்​பட்​டது. இதில் உள்ள ஏவுகணை​கள் பாகிஸ்​தானில் சிந்து நதிக்​குக் கிழக்கே உள்ள எந்​தவொரு வான்​வழி இலக்​கை​யும், 400 கி.மீ. தொலை​விலிருந்து தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டவை ஆகும்.

இந்​தியா வரவிருக்​கும் எஸ்​-400 கவச வாக​னத்தை ஆய்வு செய்​யும் பணி ஏப்​ரல் 18-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதையடுத்து கடந்த வாரம் ரஷ்​யா​விலிருந்து கப்​பல் மூலம் இது இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஏவு​கணைப் பாது​காப்பை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இது ராஜஸ்​தான் எல்லையில் நிலைநிறுத்​தப்​படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்​யா​வில் இருந்து 5-வது எஸ்​-400 பாது​காப்பு கவசம், இந்த ஆண்டு நவம்​பரில் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கிடை​யில் ரஷ்​யா​விடம் இருந்து மேலும் 5 எஸ்​-400 கவச வாக​னங்​களை கொள்​முதல் செய்ய மத்திய அரசு ஒப்​புதல்​ அளித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT