வருங்கால வைப்புநிதி (பிஎஃப்) சந்தாதாரர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தவிருப்ப தாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
‘பிஎஃப் உங்கள் அருகில்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அவர் இதுதொடர்பாகக் கூறும்போது, “பிஎஃப் சந்தாதாரர்கள் ஓய்வுபெறும்போது அவர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனக் கருதுகிறோம். இதுதொடர்பாக பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
பொதுத்துறை வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், மாநில அரசின் வீட்டுவசதி அமைப்புகளுடன் இணைந்து அரசு நிர்ணயித்த விலையில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரிய ஆணையர் கே.கே. ஜாலன் கூறும்போது, “பிஎஃப் அறங்காவலர்கள், தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு இதுதொடர்பான திட்டத்தை வடிவமைத்து வருகிறது” என்றார்.