இந்தியா

கசாப்பை அடுத்து யாகூப் மேமன்

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர்.

மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண் டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.

அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT