இந்தியா

கர்நாடகாவிலிருந்து ப.சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப சித்தராமையா எதிர்ப்பு: பா.ஜ.க.வில் நிர்மலா சீதாராமனுக்கு வாய்ப்பு

இரா.வினோத்

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலா ளர் திக் விஜய்சிங் தலைமையில் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அப்போது சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சிதம்பரத்துக்கு ஆதர வாக கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சித்த ராமையா பேசுகையில், “கர்நாடகா வுடன் துளியும் தொடர்பில்லாத தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்தை இங்கிருந்து தேர்வு செய்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால் கன்னடர் களை புறக்கணித்துவிட்டு வேறு மாநிலத்தில் இருப்பவரை தேர்வு செய்தால் கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்படும். அவரைத் தேர்ந்தெடுப் பதற்கு பதிலாக கர்நாடகாவில் இருக்கும் தகுதியான தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்'' என கூறினார்.

அதற்கு திக்விஜய் சிங், 'அவர் (சிதம்பரம்) தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வி அடையும் என் பதைக் கணித்து போட்டியிடுவதைத் தவிர்த்தார். இதனால் கட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டது'' என பதிலளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு வாய்ப்பு

இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க. சார்பாக நிர்மலா சீதாராமனை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படு கிறது. தற்போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய இணை அமைச்சராக பொறுப் பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் இன்னும் ஆறு மாதங்களில் மாநிலங் களவைக்கோ மக்களவைக்கோ தேர்வு செய்யப்பட வேண்டும்.

எனவே கர்நாடகாவில் இருக்கும் 46 பா.ஜ.க.உறுப்பினர்களை பயன் படுத்தி நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து மாநிலங் களவைக்கு அனுப்ப அக்கட்சி அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் நிர்மலா சீதாராமனின் பெற்றோர் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் வசித்து வருவதால், அவர் தமிழராக இருப்பினும் கர்நாடகாவுடன் தொடர்பிருப்பதால் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT