இந்தியா

மக்களவை இடைக்காலத் தலைவர் கமல்நாத்

செய்திப்பிரிவு

மக்களவையின் இடைக்காலத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், “மக்களவையின் மிக மூத்த உறுப்பினரான கமல்நாத்தை, மக்களவை இடைக்காலத் தலைவ ராக நியமிக்கும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மக்களவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை இடைக்காலத் தலைவராக கமல்நாத் செயல்படுவார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக கமல்நாத் பொறுப்பு வகித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக கமல்நாத் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT