இந்தியா

ஆம் ஆத்மிக்கு நன்கொடை: கேஜ்ரிவால் கோரிக்கை

பிடிஐ

ஆம் ஆத்மி கட்சி நிதிப்பற்றாக்குறை யால் தவித்து வருவதால் அக்கட்சிக்கு நன்கொடை அளிக்கும்படி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கேஜ்ரிவால் கூறும்போது, “டெல்லியில் ஆட்சி யமைத்த பிறகு, கட்சியின் நிதி தீர்ந்துவிட்டது. கட்சியை நடத்த நிதி தேவைப்படுகிறது. முதல்வரான பிறகும் நன்கொடை கேட்பதால், நீங்கள் என்னை வினோதமான முதல்வர் எனக் கூறலாம். தவறான முறையில் பணம் சேர்ப்பதாக இருந்தால் உங்களிடம் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் முறை கேடான வழியில் செல்ல விரும்ப வில்லை. மக்கள் எங்களுக்கு நிதியுதவி செய்கின்றனர். ஒருபோதும் மறைவாக பணம் வாங்கியதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு இருக்கிறது. நிதியளியுங்கள். ஏனெனில் நீங்கள் அளிக்கும் ரூ.10 கூட நேர்மையான அரசியல் செய்ய உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT