இந்தியா

‘வியாபம்’ ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு அதிரடிப் படைக்கு அனுமதி

பிடிஐ

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ முறை கேட்டை விசாரித்து வந்த மத்தியப் பிரதேச சிறப்பு தனிப்படையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி, சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வியாபம் வழக்கில் 185-க்கும் மேற்பட்ட வழக்குகள் தனிப்படையினரிட மிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டால் விசாரணை தாமதமாகும். எனவே, தனிப்படையினரால் விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைக் காரணம் காட்டி, சிறையில் உள்ளவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுவர்’ என தெரிவிக்கப்பட்டது..

இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையில் நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தனிப்படைக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

மேலும், குற்றவியல் நடவடிக் கைகளுக்கு உட்பட்டு உரிய மேல் நடவடிக்கைகளைத் தொடரவும் தனிப்படைக்கு நீதிபதிகள் அனு மதி அளித்துள்ளனர்.அதேசமயம் இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 டன் ஆவணம்

வியாபம் வழக்கில் தொடர் புடைய 12 டன் ஆவணங்களை சிபிஐ வசம், தனிப்படை ஒப் படைக்கவுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், வழக்கு குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங் கள் ஆயிரக்கணக்கான பக்கங் களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை, சுமார் 12 டன்னுக்கும் அதிக மான எடை கொண்டவை. வியாபம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள் ளதால், இந்த ஆவணங்கள் சிபிஐ யிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

2013-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான கேஸ் டைரி ஒரு லட்சம் பக்கங்க ளையும், 2012-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வு மோசடி கேஸ் டைரி 80,000 பக்கங்களையும் கொண்டுள்ளது. இதுவரை 55 வழக்குகளைப் பதிவு செய்துள்ள தனிப்படை இவற்றில் 28 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

SCROLL FOR NEXT