இந்தியா

சாலை விபத்தில் 8 பேர் பலி

பிடிஐ

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 2 ஜீப்புகள் நேற்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

சிகார் மாவட்டத்தில், லக் ஷ்மன்கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலக்புரா என்ற கிராமத்துக்கு அருகில் இந்த விபத்து நடந்தது. பால் பண்ணைக்கு கேன்களில் பால் எடுத்துச் சென்ற ஜீப்பும் எதிரே வந்த பயணிகள் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேர் சம்பவ இடத்திலும் 5 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவர்கள் 8 பேரும் பயணிகள் ஜீப்பில் வந்தவர்கள். இவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT