இந்தியா

மகாராஷ்டிரத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

தானே மாவட்டத்தின் சோல்வே என்ற கிராமத்தில் மத்ருச்சயா என்ற பெயரில் 4 மாடி கட்டிடம் இருந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் இந்தக் கட்டிடம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.

தகவலின் பேரில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 10 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனினும் தொடர் மழை, இப்பணிக்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கல்யான் எம்.பி. காந்த் ஷிண்டே, மாவட்ட ஆட்சி யர் அஸ்வினி ஜோஷி ஆகியோர் மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT