நாடு முழுக்க இன்று (சனிக்கிழமை) சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பர்தா அணியவும், முழு நீள சட்டை அணியவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒன்றை இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, "பர்தா இல்லாமல் நீங்கள் தேர்வு எழுதினால், உங்கள் மத நம்பிக்கை மறைந்து போகாது" என்று கூறி அந்த மனுவை தள்ளு படி செய்தது.