இந்தியா

கனமழை: பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் ரத்து

பிடிஐ

கனமழை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டது.

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (புதன்கிழமை) தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தது.

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எலும்பு முறிவு மையத்தையும் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இந்நிலையில் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பிரதமரின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாரணாசி பயணம் 2-வது முறையாக ரத்தாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 28-ம் தேதி பிரதமர் வாரணாசி செல்வதாக இருந்தது. அப்போதும் அங்கு கனமழை பெய்ததால் அவரது பயணம் ரத்தானது.

SCROLL FOR NEXT