இந்தியா

எம்.பி.க்கள் கருத்தரங்கில் மோடி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ‘மக்களவைத் தலைவரின் ஆராய்ச்சி முயற்சி’ என்ற பெயரில் நேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

நாம் எடுக்கும் முடிவுகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எனவே, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கட்சியின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் நிலை வர வேண்டும். எந்த ஒரு பிரச்சினை குறித்து முடிவு எடுத்தாலும் பிராந்திய மற்றும் சர்வதேச கோணத்தில் அதை அணுக வேண்டும். உலகமயமாக்கல் கொள்கை கடைபிடிக்கப்படும் இந்தக் காலத்தில் நாம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT