டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், போலீஸாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சித்ததாக குற்றம் சாட்டி இரு போலீஸ்காரர் கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதி டெல்லி ஆனந்த் பர்பாட் பகுதியில் 18 வயது பெண் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார். இரு இளைஞர்கள் அவரை ஓட ஓட துரத்தி 35 முறை கத்தியால் குத்தி னர். இதேபோல டெல்லியில் பல ஆண்டுகளாக குழந்தைகளை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர் அண்மையில் பிடிபட்டார். அவர் இதுவரை 15 குழந்தைகளை கொலை செய் திருப்பதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
நாளுக்கு நாள் குற்ற சம்பவங் கள் அதிகரித்து வருவதால் போலீஸ் துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர் களிடம் பேசியபோது, டெல்லி சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும், டெல்லி போலீஸார் விழிப்புடன் செயல்பட வேண்டும். போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கி னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவரது பேட்டி போலீஸாரை இழிவுபடுத்தும் வகையில் உள்ள தாக குற்றம் சாட்டி ஹர்வீந்தர் சிங் என்ற போலீஸ்காரர் போலீஸ் கமிஷனர் பாஸியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதேபோல் மற் றொரு போலீஸ்காரர் லஜ்பத்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை போலீஸ் கமிஷனர் பாஸி நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லி சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு பாஸி நிருபர் களிடம் பேசியபோது, போலீஸா ருக்கு என்று வரையறுக்கப்பட்ட விதிகளின்படியே நடப்போம், முதல்வர் கூறுவதுபோல் டெல்லி போலீஸை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. போலீஸார் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக கேஜ்ரிவாலை போலீஸ் கமிஷனர் பாஸி நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.