‘வியாபம்’ ஊழல் முறைகேட்டை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்புவோம் என காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜோதிராத்திய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:
‘வியாபம்’ ஊழல் புகார் பற்றி விசாரிப்பதில் மத்தியப்பிரதேச அரசு மெத்தனம் காட்டுகிறது. இந்த ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள், தொடர்புடைய சாட்சிகள் பலர் மர்மமாக உயிரிழந்துள்ளனர்.
வியாபம் விவகாரத்தில், லஞ்சம் கொடுத்த ஆயிரக்கணக்கானவர் கள் சிறைகளில் வாடுகின்றனர். ஆனால் லஞ்சம் வாங்கியவர்கள் வெளியில் திரிகின்றனர்.
வியாபம் ஊழல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக நாடாளு மன்றத்தில் எழுப்பும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிபிஐ 5வழக்கு களை பதிவுசெய்துள்ளது. நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நம்பிக்கை கொடுத்தாலும் அந்த விசாரணை உச்ச நீதிமன்ற கண் காணிப்பில் நடைபெற வேண்டும்.
இவ்வாறு சிந்தியா தெரிவித்தார்.
பல்வேறு தொழில்படிப்புகளில் சேரவும், அரசு வேலைவாய்ப்பு களுக்கும் தேர்வு நடத்தும் மத்திய பிரதேச தொழில்படிப்பு தேர்வு வாரியம் (வியாபம்) நடத்திய தேர்வு களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் சம்பந்தமான முதல் வழக்கு 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி இந்தூரில் உள்ள ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்ப்டடது.
இந்த முறைகேடு தொடர்பாக காவல் துறையினர் 55 வழக்கு பதிவு செய்துள்ளனர். 2,000 பேர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த ஊழலில் தொடர் புடைய சுமார் 49 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக காங்கிரஸ் கூறிவருகிறது.
பாஜக பிரமுகர் நீக்கம்
இதனிடையே, வியாபம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட மத்தியப் பிரதேச பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் உறுப்பினரும் பாஜக தலைவருமான குலாப் சிங் கிரார் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது மகன் சக்தி சிங் கிராரும் இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஊழல் வெளி யான பிறகு சக்திசிங் தலைமறை வாகிவிட்டார்.