பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு அல்லது ஐந்து கட்டங்க ளாக நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243. அதன் பதவிக் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத் தில் இப்போதே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. மறு புறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி, முன்னாள் முதல் வர் ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட் டோர் ஒன்று சேர்ந்துள்ளனர். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தப் பின்னணியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்து வது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 31-ம் தேதி பிஹார் மாநில இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படு கிறது. தலைமைத் தேர்தல் ஆணை யர் நசீம் ஜைதி அடுத்த மாத தொடக்கத்தில் பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு செல்கிறார். அங்கு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
நவம்பர் மாதத்தில் சாத், தீபாவளி ஆகிய முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. எனவே அதற்கு முன்பாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘பண்டிகை, வானிலை, பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும், அநேக மாக நான்கு அல்லது ஐந்து கட் டங்களாக தேர்தல் நடத்தப் படலாம்’ என்று தெரிவித்தன.