லலித் மோடிக்கு உதவியது மற்றும் மத்தியப் பிரதேச மாநில வியாபம் ஊழல் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தார்.
தொடர் அமளி காரணமாக அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.