இந்தியா

காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஊடுருவல் முயற்சியை முறியடித்தது பாதுகாப்புப் படை

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதி களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி கள் நேற்று கூறியதாவது:

குப்வாரா மாவட்டம் கேரன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகப்படும் வகை யில் சிலர் நடமாடினர். இதையடுத்து, இரவில் பார்க்கும் வசதி கொண்ட சாதனங்கள் வாயிலாக பாதுகாப்புப் படையினர் கண்காணித்தபோது தீவிரவாதிகள் தடுப்பு வேலிகளை வெட்டிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களைப் பார்த்து எச்ச ரிக்கை விடுத்தபோது துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த சண்டை சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று காலையில் மேற்கொண்ட ரோந்து பணியின்போது, 3 தீவிரவாதிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் சம்பவ இடத்திலிருந்து 3 இயந்திர துப்பாக்கிகள், 12 தோட்டா உறைகள், 300 சுற்றுக்கான வெடி பொருட்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த ஆண்டில் மே 25, மே 31, ஜூன் 6 ஆகிய தினங்களில் குப்வாரா மாவட்டம் தங்கதார் பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT