இந்தியா

மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை என்ஐஏ விசாரிக்கும்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

பிடிஐ

மணிப்பூரில் சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முறையான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.

2008-ம் ஆண்டில் மும்பை யில் நடந்த தீவிரவாத தாக்கு தல் சம்பவத்தையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப் பட்டது. நாட்டில் எங்கு தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அது தொடர் பான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு அமைப்புக்கு தரப்பட்டுள்ளது.

மணிப்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பை மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பி டம் உடனடியாக ஒப்படைத்துள் ளது. மணிப்பூரில் உள்ள சந்தல் மாவட்டத்தில் வனப்பகுதியில் சென்ற ராணுவ ரோந்து வாகனங் கள் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் துரிதமாகவும் தீவிரமாகவும் இறங்கியுள்ளன. இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் நேற்று முன்தினம் மணிப்பூருக்கு சென்று தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுதி செய்தார்.

          
SCROLL FOR NEXT