இந்தியாவில் மேகி விற்பனை அதிகரிக்கக் காரணம் சோம்பல் மிகு இளம் தாய்மார்களே என மத்தியப் பிரதேசம் மாநில ஆளும் பாஜக எம்.எல்.ஏ. உஷா தாகூர் தெரிவித்துள்ளார்.
மேகி நூடுல்ஸ்க்கு பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைக்கு தனது வரவேற்பை தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. "இந்தியாவில் மேகி விற்பனை அதிகரிக்கக் காரணம் சோம்பல் மிகு இளம் தாய்மார்களே. நான் சிறுமியாக இருக்கும்போதெல்லாம் என் அன்னை எனக்கு வீட்டிலேயே சிற்றுண்டி செய்து தருவார்.
ஆனால், இன்றைக்கு இளம் தாய்மார்கள் சோம்பல் காரணமாக இரண்டு நிமிட இஸ்டன்ட் நூடுல்ஸை குழந்தைகளுக்குத் தருகின்றனர். சோமப்ல் மிகு இளம் தலைமுறை தாய்மார்களே மேகி போன்ற உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மேகி மட்டுமல்ல அனைத்து ரெடிமேட் உணவுப் பொருட்களும் தடை செய்ய வேண்டும். மேகியை தடை செய்து பாஜக அரசு மக்கள் நலன் மீதான அக்கறையை நிரூபித்துள்ளது" என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ச்சனா ஜெய்ஸ்வால் கூறும்போது, "உஷா தாகூர் தனது பேச்சால் இந்தியத் தாய்மார்களை இழிவுபடுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.