இந்தியா

போலிகளுக்கு பெயர்பெற்ற உ.பி., பிஹார்

செய்திப்பிரிவு

வட இந்தியாவில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைகழகம் உட்பட பழம்பெரும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்றதாக போலிச் சான்றிதழ்கள் பெற்றுத்தர இடைத்தரகர்கள் பலர் உள்ளனர். இவர்கள் மீது அடிக்கடி புகார் எழுந்து நூற்றுக்கணக்கான வழக்குகள் உ.பி. மற்றும் பிஹார் மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில், பிஹாரின் பாகல்பூரில் உள்ள திலக் மாஞ்சி பல்கலைக்கழகம் தரமானது என புகழ் பெற்றாலும் அதன் பெயரிலும் போலி சான்றிதழ் விநியோகம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் பயின்றதாகக் கூறப்படும் திலக் மாஞ்சி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட விஸ்வநாத்சிங் விதி சன்ஸ்தானின் சட்டக்கல்வி மையம் பாகல்பூரின் அருகிலுள்ள முங்கேரில் உள்ளது.

இந்த கல்லூரியானது பிஹாரில், வகுப்புக்கு செல்லாமல், ஆள் வைத்து தேர்வு எழுதுவது உட்பட பல்வேறு வகையான புகார்களில் சிக்கி உள்ளது. ஆனால், தோமர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் சிக்குவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT