இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாட நரேந்திர மோடி உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

இந்தியா - பாகிஸ்தான் போர் முடிந்து வரும் செப்டம்பருடன் 50 ஆண்டுகள் முடிகிறது. இதை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுமாறு ராணுவ அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடை வதற்கு முன், அதிலிருந்து பாகிஸ் தான் பிரிந்து தனி நாடாக உதய மானது. பாகிஸ்தான் ராணுவத் தினர் நம் நாட்டின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத்தின் கச் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி ஆக்கிரமிக்க முயன்றதால், 1964-ம் ஆண்டு அந்நாட்டுன் முதல் முறையாகப் போர் மூண்டது. அந்த ஆண்டின் செப்டம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நம் நாட்டிடம் சரணடைந்தனர். இதுமுடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் டெல் லியில் பெரிய அளவில் விழா எடுக்க பிரதமர் மோடி முடிவெடுத் துள்ளார். இதற்கான உத்தரவை ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் அளிக்க, அவரது நேரடிக் கண்காணிப்பில் விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராணுவ அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “மிக அதிக எண் ணிக்கையில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் வரும் செப்டம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை விழா கொண்டாட திட்டமிடப் பட்டுள்ளது. இதில் குடியரசு தின விழாவை போன்று முப்படை களின் அணிவகுப்பு டெல்லி ராஜ பாதையில் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங்களின் பலம் மற்றும் கலாச்சார பெருமையை விளக்கும் வகையில் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இது தொடர்பான திரைப்படங்கள் டெல்லியின் கன்னாட் பிளேஸ், சாந்தினி சவுக் போன்ற முக்கியப் பகுதிகளில் திரையிடப்படும். இவை அனைத்தையும் பிரம் மாண்ட கூட்டத்தில் பிரதமர் தொடங்கி வைப்பார்” என்ற னர்.

இந்தியா - பாகிஸ்தான் போரின் போது டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத் தில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரையில் ‘ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!’ என்ற கோஷம் நாட்டு மக்களை பெரிதும் ஊக்குவித்தது. இந்த உரையை தற்போதைய விழாவில் மீண்டும் ஒலிபரப்பவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இதில் எந்தவித அரசி யல் சர்ச்சைகளும் உருவாகி விடாமல் தடுக்கும் பொருட்டு, அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சி யாளர்களின் மேடைப் பேச்சு களுக்கு அன்றாட நிகழ்ச்சிகளில் இடம் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

சுமார் 2 மாதங்களுக்கு முன் டெல்லியின் மானெக் ஷா அரங்கில் மத்திய அரசு, முதல் உலகப்போர் முடிந்து 100 ஆண்டுகள் முடிந்ததை குறிப்பிடும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தியது. இதில் முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட இந்தியர்கள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. இந்தப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் போரிட்டு உயிரிழந்தனர்.

முதல் உலகப் போரில் இறந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் விழா நடத்தின. கடந்த மாதம் பாரீஸ் சென்றிருந்த பிரதமர் மோடி அங்குள்ள நினைவுச்சின்னத்தில் இந்திய போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவருக்கு உதித்த யோசனையின்படி இந்தியா-பாகிஸ்தான் போரின் 50 ம் ஆண்டு விழா கொண்டாட இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT