இந்தியா

டீஸ்டாவின் என்ஜிஓக்களுக்கு நோட்டீஸ்

பிடிஐ

சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் நடத்தும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத் கலவரத்தின்போது அந்த மாநில அரசுக்கு எதிராக சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் போர்க்கொடி உயர்த்தினார். அவர் நடத்தி வரும் என்ஜிஓக்களில் நிதி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டீஸ்டாவும் அவரது கணவர் ஜாவித் ஆனந்தும் நடத்தும் இரண்டு தொண்டு நிறுவனங்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கடந்த ஏப்ரலில் ஆய்வு நடத்தினர்.

டீஸ்டாவின் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பத்திரிகை ஒன்று நடத்தப்படுகிறது. அதற்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT