இந்தியா

முதலில் வங்கதேசத்துக்கு வருமாறு மோடிக்கு ஷேக் ஹசீனா அழைப்பு

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

உரையாடலின்போது பிரதமராக பொறுப்பேற்றதும் முதல் வெளி நாட்டுப் பயணமாக தங்கள் நாட்டுக்கு வருமாறு ஹசீனா அழைப்பு விடுத்தார். மேலும், மோடி தலைமையிலான ஆட்சியின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மோடிக்கு ஹசீனா கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறியிருப் பதாவது:

உங்களுடைய சிறந்த நிர்வாகத் திறமை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய வாக்காளர்கள் உங்களுக்கு அமோக வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த 1971-ல் நடைபெற்ற சுதந்திரப் போரில் இந்திய ஆதர வாக இருந்ததன் மூலம் வெற்றி கிடைத்தது. இதனால், இந்தியாவும் வங்கதேசமும் இயற்கையான கூட்டாளிகளாக விளங்கி வரு கின்றன. உங்களுடைய சீரிய தலை மையின் கீழ் வரும் காலங்களில் இந்த உறவு மேலும் வலுவடையும் என நம்புகிறேன்.

SCROLL FOR NEXT