இந்தியா

வசுந்தராவை களங்கப்படுத்தும் ஊடகங்கள்: ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் பாய்ச்சல்

பிடிஐ

லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் ஊடகங்கள் தனது புகழுக்கு களங்கம் விளைவிப்ப தாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலக ஊடக ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து, முதல் வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றன. அரசியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தவும் அவை காரணமாக அமைகின்றன.

வதந்திகளின் அடிப்படையில் தவறான தகவல்களை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. செய்திகளை வெளியிடும் முன்பாக உறுதிப்படுத்துதலும் புலனாய்வும் நிச்சயம் தேவை. ‘110 எம்எல்ஏக்கள் ராஜேவுக்கு ஆதரவு’, ‘வசுந்தரா ராஜினாமா செய்ய வலியுறுத்தல்; ராஜினாமா செய்ய வசுந்தரா மறுப்பு’, ‘நான் நீக்கப்பட்டால் கட்சிக்கு மிகப்பெரும் பிரச்சினை வரும்:

வசுந்தரா’ ‘வசுந்தரா வெளியேறி னால் பாஜக பிளவுபடும்’ என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன. ‘முதல்வர் டெல்லி செல்கிறார்’, ‘முதல்வர் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை’, ‘சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் டெல்லி செல்கிறார்’ என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின்றன. இவையெல்லாம் உண்மை யில்லை. அனைத்து செய்திகளும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT