இந்தியா

ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

செய்திப்பிரிவு

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரான்ஸில் இருந்து வங்க தேசம், சிலிகுரி, பூடான் வழியாக சீனாவுக்கு பாம்பு விஷம் கடத்தப்படுவதாக மேற்கு வங்க வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் சிலிகுரி அருகே 6 பேர் கொண்ட கும்பலை பிடித்தது.

அவர்களிடம் மூன்று குடுவைகளில் இருந்த பாம்பு விஷம் பறிமுதல் செய்யப் பட்டது. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.100 கோடியாகும். கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT