கேரள மாநில சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபை கேரள அரசு நியமித்துள்ளது.
இதற்கான முடிவு இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதற்காக ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதேபோல், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அரசு முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபுக்கு இன்றளவும் உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
எனவே தான் விசிட் கேரளா என்ற திட்டத்துக்கு ஸ்டிஃபி கிராஃபை தூதராக நியமித்திருக்கிறது கேரள அரசு.