இந்தியா

ஐஐடி மெட்ராஸ் விவகாரத்தில் மவுனம்: நரேந்திர மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய பிரதேச மாநிலம் மவூ என்ற ஊரில் பீமராவ் அம்பேத்கர் பிறந்தார். அவரின் 125-வது பிறந்த ஆண்டை காங்கிரஸ் பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் மவூ ஊரில் தலித் தலைவர்களை ராகுல் சந்தித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பங் கேற்ற அவர் பாஜக அரசு மீது குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசிய தாவது: பாஜகவின் சித்தாந்தங்கள் சாதியை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்துகின்றன. அதிகாரம் ஓரிடத்தில் குவிவது சாதி அமைப்பை வலுப்படுத்துவதாகும். அதிகாரப்பரவல்தான் சாதி அமைப்பை வலுவிழக்கச் செய்யும். அதைத்தான் அம்பேத்கரும் கூறியுள்ளார்.

நாடு இன்னும் சாதிக் கட் டமைப்புகளிலிருந்து விடுபட வில்லை. குறிப்பிட்ட சில பிரிவின ருக்கு உரிமைகள் மறுக்கப்படும் சமூக அநீதிகளுக்கு எதிராக இளை ஞர்கள் அமைதி காக்கக்கூடாது.

சாதி மற்றும் மதத்தின் பெயரால் இன்னும் மக்கள் வேறுபடுத்தப் படுகின்றனர். சிலர் சம உரிமை களை வழங்க மறுக்கின்றனர்.

அம்பேத்கர், பெரியார் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனை களைப் பின்பற்றும் சிலர் குரல்கள் நசுக்கப்படுகின்றன. பிரதமர் மற்றும் மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த மாணவர் அமைப்பு சிக்கலான நிலையில் உள்ளது. தற்போதுகூட சில மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதையே இது வெளிக்காட்டுகிறது. நாட்டில் சமூக சமஉரிமை இல்லை என்பதை யும் இது சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு ராகுல் பேசினார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, தலித்துகளை காங்கிரஸ் வாக்குவங்கியாக மட்டுமே பார்க்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. மத்தியப் பிரதேச அமைச்சர் லால் சிங் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறும் போது, “காங்கிரஸ் எப்போதும் தலித்துகளை வாக்கு வங்கியாகவே பார்க்கிறது. மக்களவையில் 44 இடங்களே கிடைத்துள்ளதால், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே தலித்துகளை தவறாக வழி நடத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT