இந்தியா

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன்-6 வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜுன்-6 வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT